உங்கள் அப்பங்களையும் மீன்களையும்
கொண்டு வாருங்கள், மீதியை தேவன் பார்த்துக்கொள்ளட்டும்.
உங்கள் நன்கொடை பற்றி
உங்கள் நன்கொடை ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது
வரிவிலக்குக்கு உட்பட்ட உங்கள் நன்கொடையானது தி சோசன் (The Chosen) தொடரின் ஏழு பருவங்களுக்கும் பின்வருவனவற்றை உறுதி செய்கிறது.
உலகளவில் கிடைக்கப்பெறுதல்
600 மொழிகளில் மொழிபெயர்ப்பு
அனைவருக்கும் இலவசம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நிச்சயமாக! உங்கள் நன்கொடைக்கான பாதுகாப்பை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். உங்கள் நிதித்தகவல் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டண செயலாக்க தளங்களைப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணையதள பரிவர்த்தனைகள் குறியாக்கம் செய்யப்பட்டு தொழில்துறை தரநிலைகளின்படி பாதுகாக்கப்படுகின்றன.
ஆம், கம் & ஸீ (Come & See) அறக்கட்டளைக்கான உங்கள் நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. ஒரு பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக, எங்கள் பிரச்சாரங்களில் செய்யப்பட்ட அனைத்து பங்களிப்புகளுக்கும் வரிவிலக்கு ரசீதுகளை வழங்குகிறோம். உங்கள் இருப்பிடம் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரை அணுகவும்.
நிச்சயமாக. நீங்கள் பெயரைக் குறிப்பிடாமல் (அநாமதேய) நன்கொடை அளிக்க விரும்பினால், எங்கள் பிரச்சாரத்திற்கு பங்களிக்கும் போது, அவ்வாறு செய்யலாம். உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியமானது, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உதவிடும் உங்கள் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம்.
நிச்சயமாகவே! உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக வலைப்பின்னல்களுடன் பிரச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ள நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த செய்தியைப் பரப்புவதில் உங்கள் ஆதரவு, அநேக பார்வையாளர்களை அடையவும், " “தி சோசன்” (The Chosen) தொடரின் தமிழ் ஒலிப்பதிவை (டப்பிங்) ஒரு யதார்த்தமாக மாற்றவும் எங்களுக்கு உதவுகிறது.
நிதிப் பங்களிப்புகளுக்கு அப்பால் நீங்கள் இதில் ஈடுபட பல வழிகள் உள்ளன. நீங்கள் எங்கள் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கலாம், சமூக ஊடகங்களில் எங்கள் உள்ளடக்கத்துடன் ஈடுபடலாம், மேலும் "தி சோசன்” (The Chosen) தொடரையும், கம் & ஸீ (Come & See) அறக்கட்டளையையும் பிறருக்குப் பரிந்துரைக்கலாம். உங்கள் உற்சாகமும் ஈடுபாடும், எங்கள் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆம், உங்கள் நன்கொடைக்கான வரி விலக்கு ரசீதைப் பெறுவீர்கள். வரிவிதிப்பு நோக்கங்களுக்காக ஆவணங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் உங்கள் பங்களிப்பைச் செய்த பிறகு தேவையான ரசீதைப் பெறுவதை உறுதி செய்வோம்.
உங்கள் நன்கொடையை அளிக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்கள் ஆதரவு குழுவை donate@comandseefoundation.org இல் அணுக தயங்க வேண்டாம். உங்கள் நன்கொடை செயல்முறை சுமூகமாக செல்கிறது என்பதை உறுதிப்படுத்தவும், உங்களுக்கு உதவவுமே நாங்கள் இருக்கிறோம்.
எந்தவொரு காரணத்திற்காகவும், நிதி திரட்டும் இலக்கை அடையவில்லை என்றால், திரட்டப்பட்ட நிதியானது இன்னும் "தி சோசன்” (The Chosen) ஒலிப்பதிவைத் தமிழில் (அல்லது * இங்கே குறிக்கோளை செருகவும்*) உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு பங்களிக்கும். இலக்கை அடைவது முக்கியம் என்றாலும், திரட்டப்பட்ட எந்தவொரு தொகையும் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு நெருக்கமாக நம்மைக் கொண்டுவரும்.
ஆம், உங்கள் ஆதரவுக்கான எங்கள் பாராட்டின் அடையாளமாக நாங்கள் பலவிதமான ஊக்கப்பரிசுகளைத் தயாரித்துள்ளோம். உங்கள் பங்களிப்பு அளவைப் பொறுத்து, திரைக்குப் பின்னால் உள்ள பிரத்யேக உள்ளடக்கம், டிஜிட்டல் பதிவிறக்கங்கள், வணிகப் பொருட்கள் மற்றும் "தி சோசன்” (The Chosen) தொடர்பான சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் போன்ற வெகுமதிகளை நீங்கள் பெறலாம்.
கம் & ஸீ (come & see) அறக்கட்டளை என்பது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும், அங்கு உங்கள் வரிவிலக்கு நன்கொடை "தி சோசன்” (The Chosen) தொடருக்கான தயாரிப்பின் உற்பத்தி, உலகெமுங்கும் கிடைக்கப்பெறுதல் மற்றும் மொழிபெயர்ப்பை ஆதரிக்க பயன்படுத்தப்படுகிறது. “உதவிக்கான தொடர்ச்சங்கிலி (Pay-It-Forward)” என்பது ஏஞ்சல் ஸ்டுடியோஸுக்கு பணம் செலுத்துவதற்கான ஒரு விருப்ப முறையாகும், இது ஏஞ்சல் ஸ்டுடியோஸுக்கு பயனளிக்கிறது, மேலும் அதன் ஒரு பகுதி "தி சோசன்” (The Chosen) தொடருக்கும் பயனளிக்கிறது.
ஏஞ்சல் ஸ்டுடியோஸ் செயலியில்தான் உங்கள் “உதவிக்கான தொடர்ச்சங்கிலி (Pay-It-Forward)” சந்தாக்கள் மற்றும் பணஞ்செலுத்துதல்கள் நடைபெறுகின்றன; ஏஞ்சல் நிர்வாகம் அதையெல்லாம் நிர்வகிக்கிறது. நீங்கள் நிச்சயமாக அதைத் தொடரலாம், நீங்கள் வேறுவிதமாகக் கூறாவிட்டால் உங்கள் தற்போதைய சந்தா தொடரும்! உதவிக்கான தொடர்ச்சங்கிலி (PIF) தொடர்பான ஏதேனும் கேள்விகள் எப்போதும் போலவே ஏஞ்சல் ஸ்டுடியோஸுக்கு அனுப்பப்படலாம்.
குறிப்பு: “உதவிக்கான தொடர்ச்சங்கிலி (Pay-It-Forward)" சந்தாக்கள் புதிய "தி சோசன்” (The Chosen) செயலியுடன் தொடராது, அல்லது அவை கம் & ஸீ (Come & See) க்கு நன்கொடைகளாக மாற்றப்படுவதில்லை. ஏஞ்சல் ஸ்டுடியோஸின் “உதவிக்கான தொடர்ச்சங்கிலி (Pay-It-Forward)" மற்றும் கம் & ஸீ (Come & See)க்கான "நன்கொடை" ஆகியவை வெவ்வேறு பரிவர்த்தனைகள்.
பொறுமையாய் இருங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்கள் கஷ்டத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இது நிச்சயமாக இந்த நேரத்தில் குழப்பமாகத் தோன்றலாம். அந்த ஒப்பந்தம் பின்வருமாறு:
தி சோசன் (The Chosen) தொடர் உட்பட ஏஞ்சல் ஸ்டுடியோஸ் என்பது பல திட்டங்களைக் கொண்ட ஒரு தளமாகும்; தி சோசன் (The Chosen) தொடரைத் துவங்க அவர்கள் உதவினர் (அவர்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி இல்லை). தற்போது அவர்களின் முதன்மை நிதி மற்றும் கட்டண மாதிரி “உதவியின் தொடர்ச்சங்கிலி” (Pay-It-Forward) முறையாகும்; ஆம், அதன் ஒரு பகுதி தொடர்ந்து தி சோசன் (The Chosen) தொடருக்கு செல்லும்.
தி சோசன் (The Chosen) என்பது ஒரு தனி நிறுவனம், நாங்கள் புதிய "தி சோசன்" (The Chosen) செயலியை வைத்திருக்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான கம் & ஸீ (Come & See) அறக்கட்டளையுடன் ஒரு புதிய விநியோகக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
தி சோசன் (The Chosen) செயலியின் மூலம் நீங்கள் கம் & ஸீ (Come & See) அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும்போது, உங்கள் நன்கொடையில் 90% எதிர்கால அத்தியாயங்கள் மற்றும் சீசன்களின் (பருவங்களின்) தயாரிப்புக்கு செல்கிறது; 10% கம் & ஸீ (Come & See) அறக்கட்டளை தொடர்ந்து செயல்படவும், பராமரிக்கப்படவும் செலவழிக்கப்படுகிறது.